திருச்செந்தூரில் கோயிலின் வெள்ளை யானை உலா

by Editor / 16-08-2021 09:53:18am
திருச்செந்தூரில் கோயிலின் வெள்ளை யானை உலா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் வெள்ளை யானை வீதி உலா நடந்தது. 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தர மூர்த்தி நாயனார்,ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று இறைவனுடன் இரண்டுறக் கலந்தார். இதன் பொருட்டு சுந்தர மூர்த்தி நாயனார் கைலாயம் வந்து சேரும் வகையில் வெள்ளை யானையை சிவ பெருமானே அனுப்பி வைத்தார். வெள்ளை யானையில் ஏறி கைலாயம் சென்ற சுந்தர மூர்த்தி நாயனாரை எதிர்கொண்ட சிவ பெருமான், சுந்தரா வா, என அவருக்கு அருட்காட்சி கொடுத்து அழைத்தார் என்பது ஐதீகமாகத் திகழ்கிறது.

இந்த சிறப்புமிக்க சம்பவம் ஆடி சுவாதி நட்சத்திரத் தினத்தையொட்டி நடந்ததால் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருடந்தோறும் சுந்தர மூர்த்தி நாயனார் வெள்ளை யானை வீதி உலா நடப்பது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் ஆடி சுவாதி நட்சத்திர தினமான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் நடை அதிகாலை 5.மணிக்குத் திறக்கப்பட்டு வழக்கம் போல் 05.30மணியளவில் விஷ்வரூப தீபாராதனை நடந்தது.தொடர்ந்து அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 05.15 மணிக்கு கோவிலில் வெள்ளை யானை மற்றும் சுந்தர மூர்த்தி நாயனார் உள் வீதி உலா ஆலயத்தின் இரண்டாம் உட்பிரகாரத்திற்குள் நடந்தது. 

 

Tags :

Share via