காஷ்மீரில் போலீஸ் என்கவுண்ட்டர்: பயங்கரவாத  இயக்கத் தளபதி உட்பட 2 பேர் சுட்டுக் கொலை

by Editor / 24-08-2021 04:06:20pm
காஷ்மீரில் போலீஸ் என்கவுண்ட்டர்: பயங்கரவாத  இயக்கத் தளபதி உட்பட 2 பேர் சுட்டுக் கொலை


காஷ்மீரில் போலீசார் என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா இயக்க முக்கிய தளபதி உள்பட 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.


லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தளபதி அப்பாஸ் ஷேக். இவர் நீண்டநாளாக தேடப்பட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று அலோச்சி பாக் பகுதியில் அவனையும் அவனது கூட்டாளிகளையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த என்கவுண்டர் இது.


ஷேக் அப்பாஸும் அவரது கூட்டாளி ஷாகிப் மன்சூரும், அலோச்சி பாக் பகுதியில் இருப்பது தொடர்பாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அங்கு ஸ்ரீநகர் காவல்துறையினர் சாதாரண உடையில் குவிந்தனர். காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜய்குமார் வழிகாட்டுதலின்படி அண்டர்கவர் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷேக் மற்றும் மன்சூரை சுற்றிவளைத்தப் போலீஸார் அவர்கள் என்ன நடக்கிறது எனக் கணிப்பதற்குள் குறிவைத்து சுட்டு வீழ்த்தினர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் சம்பவ பகுதியில் இருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


இந்த இருவரும் ஸ்ரீநகர் இளைஞர்களை மூளைச் சலவை செய்து தீவிரவாதிகளாக மாற்றி வந்தனர். இதுதவிர இவர்கள் பல்வேறு தீவிரவாத வன்முறைச் சம்பவங்களிலும் தொடர்பில் இருந்துள்ளனர். 46 வயதான ஷேக் ஆரம்பத்தில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் இருந்துள்ளார். பின்னர் அங்கிருந்து விலகி லஷ்கர் இ தொய்பா அமைப்பில் இணைத்துக் கொண்டார்.


மன்சூர் முதுநிலை பட்டதாரி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகத் தான் இவர் தி ரெஸிஸ்டன்ஸ் ஃபோர்ஸ் என்ற பெயரில் இயங்கும் ராணுவம், காவல்துறையை எதிர்த்து செயல்படும் தீவிரவாத குழுக்களின் அங்கத்தில் இணைந்தார்.
இவர்களில் ஷேக் அப்பாஸ் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில், அண்டர்கவர் ஆபரேஷனில் நேர்த்தியாக சுட்டு வீழ்த்தப்பட்டது காவல்துறையினருக்கு பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்துள்ளது. அப்பாஸ் ஷேக்கின் உத்தரவின் பேரில் சாகிப் மன்சூர் பல கொலைகளை செய்திருக்கிறான். தங்கள் பகுதியில் பெரும் பதட்டத்தை உருவாக்கி வைத்திருந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.


பயங்கரவாதிகள் கூட்டத்தில் சேருமாறு இளைஞர்களைத் தூண்டிய இருவரைப் பார்த்தாலும் பகுதி மக்கள் வெறுப்பிலும், பயத்திலும் இருந்தார்கள். மன்சூர் பட்ட மேற்படிப்பு பட்டதாரி. பயங்கரவாத அமைப்பில் கடந்த ஆண்டு சேர்ந்தான்.

 

Tags :

Share via