பிரபலமான தலைவர்கள்: உலகில் மோடி முதலிடம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 5 வது இடம்

by Editor / 07-09-2021 03:49:26pm
பிரபலமான தலைவர்கள்: உலகில் மோடி முதலிடம் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 5 வது இடம்

உலக தலைவர்களில் 70 சதவீதம் பேர் பிரதமர் மோடியை பிரபலமான தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் செல்வாக்கு மற்றும் பிரபலம் குறித்து 'தி மார்னிங் கன்சல்ட்' நடத்திய ஆய்வில், உலகின் 13 உலகத் தலைவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோர் அடங்குவர். இந்த கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார். இந்த கணக்கெடுப்பில் சுமார் 70 சதவிகித மக்கள் மோடியை பிரபலமான தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதன்மூலம் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்டோரை விடவும் பிரபலமான தலைவராக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. இதில் இந்திய பிரதமர் மோடி 70 சதவீதமும், மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் 64 சதவீதமும் இத்தாலிய பிரதமர் மரியோ டிராகி 63 சதவீதமும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் 52 சதவீதமும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 48 சதவீதம் பெற்று 5 வது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் 48 சதவீதமும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 45 சதவீதமும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ 39 சதவீதமும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் 38 சதவீதமும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 35 சதவீதமும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் 34 சதவீதமும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா 25 சதவீதமும் பெற்று அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via