உள்ளாட்சி தேர்தல் -தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம்

by Editor / 19-09-2021 09:23:45pm
உள்ளாட்சி தேர்தல் -தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம்

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு தேமுதிக சார்பில் 4 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

"வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் பார்த்தசாரதி நியமிக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு கட்சியின் அவைத் தலைவர் வி.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களுக்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியை மேற்கொள்ள வேண்டும்" என்று விஜயகாந்த் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via