கூகுளின் ரகசிய அறிக்கை கசிவு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

by Editor / 24-09-2021 11:03:55am
கூகுளின் ரகசிய அறிக்கை கசிவு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்தியாவில் எந்தவொரு நிறுவனமும் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதை, 'இந்திய போட்டி ஆணையம்' கண்காணித்து வருகிறது. இதன் விதிமுறைகளை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது தொடர்பாக கூகுள் நிறுவனத்திடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தியது. அதில், `கூகுள் நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில் ஆன்ட்ராய்டு வர்த்தக விதிகளை மீறி சட்ட விரோதமாக செயல்பட்டது உறுதியாகி இருக்கிறது,' என தெரிய வந்தது. இது தொடர்பாக கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து அனுப்பிய ரகசிய அறிக்கை, பொதுவெளியில் கசிந்து இருப்பதாக கூகுள் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, போட்டி ஆணையத்துக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இது பற்றி கூகுள் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ``ரகசிய தகவல்களை பாதுகாப்பது என்பது எந்தவொரு அரசு புலனாய்விலும் அடிப்படையானது. இந்திய போட்டி ஆணையத்தின் இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்ட கூகுள் நிறுவனத்தின் ரகசிய அறிக்கை, ஊடகங்களில் வெளியானது கவலை அளிக்கிறது. , இதே போன்று எங்கள் நிறுவனம் அளித்துள்ள மற்றொரு ரகசிய அறிக்கையும் கசிவதை தடுக்கவும், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Tags :

Share via