காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ரூ.2.60 கோடிக்கு ஏலம்

by Editor / 29-09-2021 04:16:15pm
 காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 1,351 வாகனங்கள் ரூ.2.60 கோடிக்கு ஏலம்

 

சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்தப்படி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த 1,321 வாகனங்கள் ரூ. 2.60 கோடிக்கு ஏலம் விடப்பட்டு அந்த தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.13.09.2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம் விடும் அதிகாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.அதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட உரிமை கோராத வாகனங்கள் மற்றும் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் பொது ஏலம் விட்டு அரசு கணக்கில் சேர்த்திட மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது.இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 172 வாகனங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 135 வாகனங்களும், கரூர் மாவட்டத்தில் 207 வாகனங்களும், சேலம் மாவட்டத்தில் 103 வாகனங்களும் மற்றும் மதுரை மாவட்டத்தில் 203 வாகனங்களும் ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.இதேபோன்று திருப்பூர் மாநகர காவல்துறையில் 117 வாகனங்களும், சேலம் மாநகர காவல்துறையில் 10 வாகனங்களும் என இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 1,222, நான்கு சக்கர வாகனங்கள் 103 மற்றும் பிற வாகனங்கள் 26 என மொத்தம் 1,351 வாகனங்கள் ரூபாய் 2.60 கோடிக்கு ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.காவல் நிலையங்களில் தேங்கிக்கிடந்த வாகனங்களை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ரூபாய் 2.6 கோடி வருமானம் ஈட்டிய பணி தொடர்கிறது. பழுதடைந்த வாகனங்களை ஏலம்விட்ட காவல் ஆணையர்களையும், காவல் கண்காணிப்பாளர்களையும் 

 

Tags :

Share via