ராஜஸ்தானில் விஷப் பாம்பை ஏவி விட்டு  மாமியாரைக் கொன்ற மருமகள், கள்ளக் காதலன்

by Editor / 07-10-2021 03:37:21pm
ராஜஸ்தானில் விஷப் பாம்பை ஏவி விட்டு  மாமியாரைக் கொன்ற மருமகள், கள்ளக் காதலன்

பாம்பை ஏவி விட்டு மாமியாரைக் கொலை செய்த மருமகள், அவளின்- காதலனுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது.
பரபரப்பூட்டும் இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:


ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்பனா, சச்சின் தம்பதி. இதில் சச்சின் ராணுவ வீரர் என்பதால், மனைவியை தனது தாயார் வீட்டில் விட்டுவிட்டு ராணுவப் பணிக்குச் சென்றுவிட்டார். திருமணம் ஆனபின்பும், அல்பனா தனது முன்னாள் காதலனும் ஜெய்ப்பூரில் வசிக்கும் மணிஷ் என்பவனுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.


இது கண்டு அதிர்ச்சி அடைந்த மாமியார் சுபோத் தேவி அல்பனாவைக் கண்டித்துள்ளார். வீட்டில் இருக்கும் மாமனார் ராஜேசும் அடிக்கடி வியாபார நிமித்தமாக வெளியூர் சென்றதால், மாமியாருக்கும், மருமகளுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் தனது முன்னாள் காதலன் ராஜேஷ், அவரின் நண்பர் கிருஷ்ண குமார் ஆகியோருடன் பேசி, தனது மாமியாரைக் கொல்ல அல்பனா திட்டமிட்டு உள்ளார். இதற்காக மாமியார் தூங்கும்போது அவரின் படுக்கை அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை ஒரு பையில் வைத்து அதை கடிக்கவைத்து கொல்ல முடிவு செய்தனர். அவர்கள் திட்டமிட்டபடி 2018ம் ஆண்டு, ஜூன் 2-ம்தேதி பாம்பு கடியால் மாமியார் சுபோத் தேவி உயிரிழந்தார். மருத்துவமனைக்கு சுபோத் தேவி கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


சுபோத் தேவி இறப்பில் சந்தேகமடைந்த போலீசார், அல்பனாவிடமிருந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தனர். அப்போது, சுபோத் தேவி இறப்பதற்கு முதல்நாள் இரவு ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்ந்து 120 அழைப்புகளை அனுப்பியது கண்டு சந்தேகமடைந்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் அல்பனா, அவரின் முன்னாள் காதலன் மணிஷ், அவரின் நண்பர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் விஷபாம்பை ஏவி விட்டு மாமியாரைக் கொல்ல மருமகளும் அவருடன் சேர்ந்த 2 பேரும் சதி செய்தது தெரியவந்தது. இதற்காக ரூ.10 ஆயிரம் கொடுத்து பாம்பாட்டியிடமிருந்து கொடிய விஷப் பாம்பை அவர்கள் வாங்கி வந்ததும் அம்பலமானது.


ராஜஸ்தானில் பாம்புக் கடியால் உயிரிழப்பது இயல்பான ஒன்று என்பதால், சுபோத் தேவி இறப்பையும் அவ்வாறு கருதுவார்கள் என்று அல்பனா நினைத்துள்ளார். ஆனால் அது வேறு மாதிரியாக முடிந்தது. செல்போன் அழைப்புகள் அவனைக் காட்டிக் கொடுத்தது. போலீசார் அவளையும், கூட்டாளிகளையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில இருக்கும் குற்றவாளிகள் மூவரும் ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது.


இந்தவழக்கில் மூவரும் புதிய முறையில் பாம்பைப் பயன்படுத்தி ஒருநபரைக் கொலை செய்துள்ளீர்கள். பாம்பாட்டியிடம் இருந்து பாம்பை வாங்கித் தருவதற்கு மனுதாரர் உதவியுள்ளார். ஆதலால் ஜாமீன் வழங்கிட முடியாது' எனத் தள்ளுபடி செய்தனர்.

 

Tags :

Share via