இந்தியாவுக்கு பொருட்களை வழங்க முன்வந்துள்ள பாகிஸ்தான்

by Editor / 25-04-2021 10:49:20am
இந்தியாவுக்கு  பொருட்களை வழங்க முன்வந்துள்ள பாகிஸ்தான்

கொரோனா 2வது அலையால் பரிதவிக்கும் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்கள், பிபிஇ உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க நம் அண்டை நாடான பாகிஸ்தான் முன்வந்துள்ளது.நம் அண்டை நாடான, பாக்., பிரதமர் இம்ரான் கான், 'டுவிட்டர்' சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: அண்டை நாடான இந்தியா மற்றும் உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகளில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ஆபத்தான இரண்டாம் அலையை எதிர்த்து, இந்திய மக்கள் கடுமையாக போராடி வருகின்றனர். மனிதகுலம் சந்தித்து வரும் சவாலான தொற்றை எதிர்கொள்ள, இந்திய மக்களுடன் துணை நிற்போம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த போரில் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு, அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியும், இந்திய மக்களுக்கு ஆதரவாக, கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா நிவாரண பொருட்களை இந்தியாவுக்கு விரைவாக வழங்கும் வழிமுறைகளில் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது, மேலும், வென்டிலேட்டர்கள், பை பி.ஏ.பி, டிஜிட்டல் எக்ஸ்-ரே இயந்திரங்கள், பிபிஇ உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது.

Tags :

Share via