கொடைக்கானலில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

by Editor / 17-10-2021 04:01:09pm
கொடைக்கானலில் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தலைமை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்வேறு புதிய அதிநவீன கருவிகள் சீடி ஸ்கேன் மற்றும் இரத்த ஆய்வகம் டிஜிட்டல் எக்ஸ்ரே போன்றவற்றையும் அரசு வழங்கியது. மேலும் 10 லட்சம் ரூபாய்க்கு மேலாக கட்டிடங்கள் மராமத்துப் பணிகளும் செய்து கொடுத்தனர்.

தமிழக அரசின் துரித நடவடிக்கை என்பதில் ஆக்சிசன் தயாரிக்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் வரவழைக்கப்பட்டு அரசு மருத்துவமனை வளாகங்களில் நிறுவப்பட்டுள்ளது.

இப்பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வந்த நிலையில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பல்வேறு கிராமப் பகுதிகளில் இருந்தும் நகர் பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் வந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைக்கு இணையாக மருத்துவமனையில் செய்யப்பட்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகிறது.

தொடர்ந்து பல்வேறு மிக முக்கியமான அறுவை சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் செலவழிக்க கூடிய தொகையானது கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் இலவசமாக தமிழக முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக பிரதம மந்திரி மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பல்வேறு நோயாளிகள் மேல் மற்றும் கீழ் மலை கிராம பகுதி மக்களும் கொடைக்கானல் தலைமை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதோடு பல்வேறு நோய்களுக்கும் மருத்துவம் மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவமனையில் பல்வேறு குறுகிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். அரசு மருத்துவமனையை சுற்றிலும் வேலிகள் அமைக்க வேண்டும். உயிர் கொள்ளக்கூடிய காட்டுமாடு விலங்குகளான காட்டெருமை அரசு மருத்துவமனை வளாகத்திலேயே கூட்டம் கூட்டமாக காணப்படுவதால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில் இதனை மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட மருத்துவ இணைச் செயலாளர் ஆகியோர்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து கொடைக்கானல் அரசு மருத்துவமனையை சுற்றிலும் வேலிகள் அமைப்பதன் இருக்கக்கூடிய குறைபாடுகளையும் கலந்துவிடவும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள்.

குறிப்பாக சில காயங்களுக்கு சில சிகிச்சைகளுக்கு மேல் சிகிச்சைகளுக்கு தேனியில் உள்ள காணப்படும் தலைமை மருத்துவமனைக்கு செல்ல இருப்பதால் அத்தகைய நோய்களுக்கும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நோயாளிகள் கூறுகின்றார்கள்.

ஆய்வின்போது கொடைக்கானல் தலைமை மருத்துவர் பொண்ரதி மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் என மாநில அரசு மருத்துவமனை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை மக்கள் வைத்துள்ளார்கள். விரைவில் அரசிடம் தமிழக முதல்வரிடம் கூறப்பட்டு அதற்குண்டான நடவடிக்கை செய்யப்படும் என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

 

Tags :

Share via