சிம்மம்

by Admin / 17-11-2018
சிம்மம்

11.11.18 முதல் 17.11.18 வரை

சிம்மம்

சிறப்பான நற்பலன்களைக் காண உள்ளீர்கள். சிரமங்கள் குறையும். நினைத்த காரியங்கள் எளிதில் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேச்சில் அதிகாரம் வெளிப்படும். வரவு சிறப்பாகி சேமிப்பு உயர்வடையும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை புதிதாக வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவிற்கு வரும். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் விருப்பத்தினை நிறைவேற்ற கூடுதலாக செலவழிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகள் பயன் தரும். ஏமாற்றப்படும் வாய்ப்பு தனியாகச் செல்வதைத் தவிர்க்கவும். வேலை பார்ப்போருக்கு அலுவலகத்தில் கவுரவம் உயரும். கலைத்துறையினர் புதிய முயற்சியில் வெற்றி காண்பர். மாணவர்கள் எழுத்து வேகத்தினால் வகுப்பில் முன்னிலை பெறுவர். நற்பலன்களை அனுபவிக்கும் மாதம் இது. வழிபாடு: மகாலட்சுமியை வழிபடுங்கள்.