10 மாவட்டங்களில் கனமழை . 

by Admin / 06-12-2021 12:29:54am
10 மாவட்டங்களில் கனமழை . 

 10   மாவட்டங்களில்  கன மழை  பெய்யும்

திருநெல்வேலி, தென்காசி,விருதுநகர்,மதுரை,தேனி,திருப்பூர்,கரூர்,திண்டுகல்,நாமக்கல்,திருச்சி  மாவட்டங்களு  10 மாவட்டங்களில்  கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

தென் தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தி ல் , தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதுதென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் . 

  கடலோர , புதுவை, காரைக்கால் பகுதிகளில்8 மற்றும் 9-ம் தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு   சென்னையில் ஒருசில இடங்களில் மழை   பெய்யக்கூடும்.  

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம் நிலைகொள்ளும் . வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், ஒரிசா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் .






 

 

Tags :

Share via