திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் இயக்கம்.

by Editor / 11-12-2021 02:23:31pm
 திருச்செந்தூர் - பொள்ளாச்சி விரைவு ரயில் டிசம்பர் 15 முதல் இயக்கம்.

திருச்செந்தூரிலிருந்து  அதன்படி வண்டி எண் 16732 மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 08.40 மணிக்கு பொள்ளாச்சி சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 16731 பொள்ளாச்சி - திருச்செந்தூர் விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் பொள்ளாச்சியில் இருந்து காலை 06.40 மணிக்கு புறப்பட்டு மாலை 03.45 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, தாழையுத்து, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சினாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி மற்றும் காப்பாளர் பெட்டிகள்  இணைக்கப்படும்.  இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம்.   இந்த ரயில்களுக்கு  வண்டி எண் 06761 பாலக்காடு - பொள்ளாச்சி மற்றும் வண்டி எண் 06762 பொள்ளாச்சி - பாலக்காடு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இணைப்பு ரயில்களாக செயல்படும்.


 

 

Tags :

Share via