உக்ரைன் தலைநகரில் இணையதள சேவை பாதிப்பு

by Admin / 26-02-2022 11:57:35am
உக்ரைன் தலைநகரில் இணையதள சேவை பாதிப்பு

உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் படையெடுத்தது. இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின.

நேற்று மட்டும் 200-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை ரஷியா நடத்தி உள்ளது என உக்ரைன் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்தது.
 
இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தொடர்ந்து ரஷ்யா 3-வது நாளாக தாக்குதல் நடத்தும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில்  இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. 

அதே சமயம் கீவ் ராணுவதளத்தை ரஷ்யா கைப்பற்றும் முயற்சியை முறியடித்து விட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.

 

Tags :

Share via