இலங்கையில் தனியார் பேருந்து சேவை முடக்கம்

by Admin / 07-03-2022 03:57:16pm
 இலங்கையில் தனியார் பேருந்து சேவை முடக்கம்

இலங்கையில் அன்னிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்து வருவதால், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உச்சத்தில் இருக்கிறது.
 
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு அதல பாதாளத்திற்கு சென்றுள்ளதால், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இயலாத நிலை தொடர்கிறது. 

எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் மின் நிலையங்கள் உற்பத்தியின்றி முடங்கியுள்ளன. இதனால் நாடு முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால்  பெட்ரோல், டீசல் நிலையங்களில் நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருக்கின்றன. 
 
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத் தரக்கோரி நுவரெலியா தலவாக்கலையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இதில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, தொடர் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி, பதாதைகளை ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via