கடையநல்லூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

by Editor / 05-11-2023 10:35:24pm
கடையநல்லூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது

வெளி மாநிலங்களில் இருந்து கடையநல்லூர் வழியாக  கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாருக்கு   ரகசியதகவல் கிடைத்ததை அடுத்து புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன் கஞ்சாவை  கடத்தி விற்பனை செய்யும் கும்பலை தீவிரமாக கண்காணித்து பிடிக்க உத்தரவிட்டார் அதன்படி  கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜா மேற்பார்வையில்  சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் போலீசார் விஜயபாண்டி, சிவராமகிருஷ்ணன், மாரிமுத்து ,கருப்பசாமி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கஞ்சா கடத்தி விற்பனை செய்து வரும்  நபர்களை கண்காணித்து வந்தனர் நேற்று மாலை கடையநல்லூர் நகருக்குள் வருகின்ற சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை தனிப்படையினர் தீவிரமாக சோதனை செய்தனர்  அப்போது கல்லூரி மாணவர்களை போன்று டிப் டாப் உடை அணிந்து தோல் பேக் அணிந்து கடையநல்லூர் குமந்தாபுரம் அருகே  இரண்டு நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் பஸ்ஸில் இருந்து கடத்தி வரப்படும் கஞ்சாவை வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளிலௌ  தயாராக நின்று நின்று கொண்டு இருந்தனர் அப்பொழுது அங்கே மறைந்திருந்த போலீசார்   அவர்களை மடக்கி பிடித்து அவர்கள் வைத்திருந்த இரண்டு பேக்கை சோதனை செய்ததில்  அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது உடனே அவர்களிடமிருந்து  கஞ்சாவை  போலீசார் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக  வாசுதேவநல்லூர்  சங்கர் மகன் ராஜசெல்வம் மற்றும் வாசுதேவநல்லூர் கீழப்புதூர் சேர்ந்த  கருத்த பாண்டியன் மகன் செல்வகுமார்  ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.தப்பி ஓடிய புளியங்குடியைச் சேர்ந்த மருதுபாண்டியானை இன்று கைதுசெய்தனர். புளியங்குடி கற்பகசுந்தர வீதி மாட்டு ரவியை போலீசார்  வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags : வெளி மாநிலங்களில் இருந்து கடையநல்லூர் கஞ்சா

Share via