காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சோனியாஆலோசனை

by Writer / 13-03-2022 03:02:47pm
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சோனியாஆலோசனை

 


காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆலோசனை செய்வதற்கான கூட்டம் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியின் தலைமையில் இன்று நான்கு மணியளவில் டெல்லிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடுமையான தோல்வியை தழுவியது.தங்கள் ஆட்சியிலிருந்த பஞ்சாபையும் இழந்து விட்டனர். இதனால் கட்சிக்குப் புத்துயிர்ப்பு ஊட்டும்விதமாக புதிய தலைவரைத்தேர்ந்தெடுக்க பல தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.கட்சியின் தொண்டர்களின் சோர்வை போக்கி புதிய ரத்தம் பீச்சினாலொழிய கட்சியைக்காப்பாற்ற இயலாது என்கிற
கருத்தை சமீபகாலமாக குலாம் நபி ஆசாத்,சசிதரூர் போன்ற தலைவர்கள்  பொது வெளியில் பேசிவருகின்றனர். தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியும் வருகின்றனர்.இன்றைக்கு எடுக்கப்படுகிற முடிவுகள்தாம் கட்சிைய புதிய பாதையை நோக்கி அழைத்துச்செல்லும் என்று தொண்டர்கள் எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

 

Tags :

Share via