வறுமையிலும் தினம் 10 கி.மீ ஓடும் இளைஞர் ராணுவத்தில் சேறுவதற்காக

by Staff / 22-03-2022 04:08:10pm
 வறுமையிலும் தினம் 10 கி.மீ ஓடும் இளைஞர்  ராணுவத்தில் சேறுவதற்காக

உத்ரகாண்ட் மாநிலத்தின் பரோலா என்ற பகுதியை சார்ந்தவர் பிரதீப் மெஹ்ரா. இவருக்கு வயது 19, இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது இவரது தீரா ஆசை என சொல்லப்படுகிறது. 

இவர் வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் என்ற உணவகத்தில் வீட்டின் வறுமைக்காக பகுதி நேர ஊழியராக பணியாற்றி  வருகிறார். இதனிடையில் இரவு நேரங்களில் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும் இவர் தினமும் 10 கி.மீ ஓட்டம் பிடித்தபடியே வீட்டுக்கு செல்வது வழக்கம் என கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தான் திரைப்பட இயக்குனர் வினோத் காப்ரி எதேச்சையாக அப்பகுதி வழியாக கார் ஓட்டி சென்றுள்ளார். அவ்வப்போது ஓடிக்கொண்டிருக்கு பிரதீப்பை பார்த்துள்ளார், இதையடுத்து பிரதீப்பிடம் வினோத் எதற்காக இப்படி ஓடுகிறாய் என கேட்டதற்கு, அவர் சொன்ன பதிலில் நெகிழ்ந்து போனாராம் வினோத். 

மேலும் இவர் காரில் இருந்த படியே வீடியோ எடுக்க பிரதீப் ஓடிக்கொண்டே பதில் கூறி வந்துள்ளார், இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்பதே என் வாழ்நாள் இலட்சியம், தினமும் காலையில் எழுந்து எட்டு மணியளவில் உணவு தயாரிப்பதில் கவனம் செலுத்துவதால் என்னால் காலை நேர பொழுதுகளில் இதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள இயலவில்லை, 

மேலும் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காடணத்தினால் இதற்கென தனி பயிற்சியாக வெளியில் செல்ல முடியாத சூழலில் உள்ளதாக தெரிவித்த அவர், இது போன்று காரணங்களால் தான் நான் இரவு நேரத்தின் பொழுது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் நான் தினமும் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன், என தெரிவித்துள்ளார். 

மேலும் வினோத் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை வெளியிட்ட சமயத்தில் இருந்து இதுவரை நாற்பது லட்ச மக்கள் பார்த்துள்ளனர். வறுமையிலும் தனது கனவினை விடாது அதனை நோக்கி செயல்பட்டு வரும் இந்த இளைஞரின் செயலை கண்டு அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

இதனை தொடர்ந்து இந்த வீடியோவினை பார்த்த முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இது குறித்து தனது கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.அவர்து ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் மெஹ்ரா ஓடும் வீடியோவை பகிர்ந்து இன்றைய காலை பொழுதை இது சிறப்பாக்கியுள்ளது! என்ன ஒரு மனிதர் என பதிவிட்டு இருக்கிறார். 
 
மேலும் இவரது வீடியோ வைரலாகி வரும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் துவா இந்த வீடியோவை பார்த்து விட்டு பிரதீப்பிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். 

இதுகுறித்து மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரதீப் மெஹ்ரா உடைய தன்னம்பிக்கை பாராட்டுக்குரியது எனவும், அவரின் தகுதியின் அடிப்படையில் இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்புத் தேர்வில் தேர்ச்சி பெற அவருக்கு உதவுவதற்காக குமான் ரெஜிமென்ட்டின் கர்னல், கிழக்கு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராணா கலிதா கர்னல் உடன் உரையாடினேன். அவர் தனது படைப்பிரிவில் ஆர்சேர்ப்புக்காக இளைஞரை பயிற்றுவிப்பதற்கான தேவையானவற்றினை செய்து தருவதாக கூறியுள்ளார் என்பதை குறிப்பிட்டும் பதிவிட்டு இருக்கிறார். 
 

 

Tags :

Share via