குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் திட்டம்நடைபெற்று வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன்

by Editor / 23-03-2022 01:33:18pm
 குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் திட்டம்நடைபெற்று வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் சிவன்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் சிவன் கோவையில் செய்தியாளர்களை சந்த்தித்தார் அப்போது அவர் தெரிவித்ததாவது: 

குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்  அமைவதற்கு தற்போதய முதல்வர் மற்றும் கனிமொழி ஆகியோர் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும் பல முயற்சிகளை எடுத்தார்.

2233 ஏக்கர் கையகப்டுத்தும்  திட்டம் நடைபெற்று வருகிறது..1200 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த ராக்கெட் ஏவுதளம்  அமையும் போது, சிறிய அளவிலான ராக்கெட்டுகள்  எளிதாக செலுத்த ஏதுவாக இருக்கும்.

குலசேகர பட்டினம் மட்டுமல்ல அதை சுற்றியுள்ள  மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்கள் எளிதாக கிடைக்கும்.தமிழக அரசு மட்டுமல்லாமல் மத்திய அரசு இந்த திட்டத்தைக் செயல்படுத்த ஆர்வமாக உள்ளது.ககயான் திட்டத்தில்  மனிதனை அனுப்புவதற்கான சோதனை முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..

 வெகு விரைவில் விண்ணுக்கு மனிதனை  அனுப்பு திட்டம் செயல்படுத்தபடும்.Global warming என்பது ஒரு global challenge அதை எதிர்கொள்வதற்கும் சரி, அதை உண்ணிப்பாக கவனிப்பதற்கும்  நமது இந்திய அரசாங்கம் விண்வெளி ஆராய்ச்சி மூலம் தொடர்ந்து பல கட்ட  ஆராய்ச்சிகளை மேற்மொண்டு  வருகிறார்கள்.என்றார்.

 

Tags : Former Indian Space Research Organization (ISRO) chief Shivan launches rocket launch project at Kulasekarapatnam

Share via