வணிக உடன்பாடு கையொப்பம்

by Staff / 02-04-2022 03:48:21pm
வணிக உடன்பாடு கையொப்பம்

இந்தியா ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிகத்துக்கான உடன்பாடு கையொப்பம் ஆகியுள்ளது வணிகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிகத்துக்கான உடன்பாடு உடன்பாடு காணொலி மூலம் கையொப்பமானது.

ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி ஆகும் 85 விழுக்காடு பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 96 விழுக்காடு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் இந்த உடன்பாடு வகை செய்கிறது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி இரு நாடுகளும் தங்கள் தேவைகளை நிறைவு செய்யும் அளவில் மிகப் பெரும் வளங்களை கொண்டுள்ளதாகவும் இந்த உடன்பாட்டை அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தியாவில் 2.140 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார் இந்த உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளிலும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படும் என குறிப்பிட்டார்.

இந்தியாவும் ஆசியாவும் இயற்கையான கூட்டாளிகள் என்றும் பெருந்தொற்று  காலத்திலிருந்து இரு நாடுகளும் ஒன்று கொண்ட ஆதரவாக இருந்து வந்ததாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இதன்மூலம் இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via