காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

by Staff / 15-04-2022 03:58:27pm
காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஈ.சி.ஆர் கடற்கரை பகுதியில் பெண்ணிடம் கடுமையாக நடந்து கொண்ட காவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த மதுமிதா பைடா என்பவர் சென்னையில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஈ.சி.ஆர் சீ ஷெல் அவென்யூ பகுதியில் நேற்றிரவு மதுமிதா பைடன் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். 

அப்போது அங்கு வந்த ரோந்துப் பணி காவலர் தம்மிடம் அநாகரீகமாகப் பேசி கடுமையாக நடந்துகொண்டதாக மதுமிதா பைடா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்து விடுவேன் என மிரட்டியதாக குறிப்பிட்டுள்ள அவர், கடற்கரையில் அமர்ந்து பேச நேரம் வரையறுக்கப்படாதபோது, பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என காவலர்களுக்கு முறையாக பயிற்சி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via