தமிழகம் புண்ணிய பூமியாக உள்ளது புனிதர்களை பெற்ற பூமி.-ஆளுநர் ரவி

by Editor / 27-05-2022 03:30:20pm
தமிழகம் புண்ணிய பூமியாக உள்ளது புனிதர்களை பெற்ற பூமி.-ஆளுநர் ரவி

திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு.

இந்தியா முழுவதிலுமிருந்து 38 மத்திய பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், மாணவ மாணவிகள்  NIT, IIT உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 8 இயக்குனர்கள் பங்கேற்பு.1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் நடைபெறும் இரண்டு நாள் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்காமல் தேசிய கீதத்துடன் தொடங்கியது. 

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பல்நோக்கு அரங்கில் இரண்டு நாள் தேசிய கல்வி கொள்கை குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது.தேசிய கல்விக் கொள்கையை விரைவாகவும் இலகுவாகவும் நடைமுறைப் படுத்துவது குறித்த செயல் திட்டம் வகுப்பது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. 

இந்த நிகழ்வில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட பின்பு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.பொதுவாக நிகழ்ச்சியின் இறுதியில் இசைக்கப்படும் தேசிய கீதம் முதலில் இசைக்கப்பட்டு அதன்பிறகு தமிழ் தாய் வாழ்த்து பாடப்பட்டது.


இவ்விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டு பேசியதாவது:

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வணிக நிறுவனம். நமக்கு பின்னால் இருந்து கொண்டு நம்மை இயக்கியது.
1852 ம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் தனது எழுத்துக்கள் மூலம் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் என்ன செய்கிறார்கள் என தெரியப்படுத்தினார். 

ஒவ்வொரு இந்தியனும் நாம் எப்படி உருவானோம் என்பதை உணர்ந்து பெருமைப்பட வேண்டும்.
தமிழகம் புண்ணிய பூமியாக உள்ளது. விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், மனோன்மணியம் சுந்தரனார், மகாகவி பாரதி போன்ற புனிதர்களை பெற்ற பூமி.

தேசிய கல்வி கொள்கை மூலமாக தமிழ் மொழிகளில் உள்ள நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து அனைவரும் படிக்கலாம் நம்முடைய அடையாளங்களை தெரிந்துகொள்ள தேசிய கல்வி கொள்கை பயன்படும்,

தேசிய கல்வி கொள்கை திட்டம் சுமூகமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை உள்ளது,
தொலைநோக்கு பார்வையோடு தேசிய கல்வி கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,

தேசிய கல்வி கொள்கை என்பது நம்மை  ஆட்சி செய்த ஆங்கியேர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசாங்கங்களால் மறைக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியம் மற்கும் கலாச்சாரம் போன்றவற்றை மீட்டெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஒரு காலத்தில் உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிடும் போது 40% இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. படிப்படியாக அதனை ஆங்கிலேயர்கள் அழித்தனர். 

இந்திய மக்களின் உழைப்பு, தளவாடங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களை ஆங்கிலேயர்கள் மற்றும் பிற நாட்டவர் இங்கிருந்து கொண்டு போய் அவர்களது நாடுகளில்  சேர்த்தனர். 

இங்கு நடைபெறும் இரண்டு நாட்கள் தேசிய கல்வி கொள்கை கருத்தரங்கு நிறைவு பெற்ற பின்னர் மத்திய அரசிடம் இது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

 

Tags : Tamil Nadu is a holy land, a land of saints.-Governor Ravi

Share via