தென்காசி மாவட்டம் ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

by Editor / 19-06-2022 01:09:19pm
தென்காசி மாவட்டம்   ஆய்க்குடி பகுதியில் அமைந்துள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

 இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், அமர்சேவா சங்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கும், மற்ற மனிதர்களைப் போல வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் உள்ளது. நமது நாட்டில் மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் உள்ளார்கள் என்பது குறித்த சரியான தகவல்கள் இல்லை. தோராயமாக கூறும் அளவுக்கு கூட தகவல்கள் இல்லை. ஒரு சில பேர் 5 கோடி என்றும், ஒரு சில பேர் 8 கோடி பேர் என்றும் கூறிவருகிறார்கள்.

 வெளிப்படையாக தெரியக்கூடிய சில குறைபாடுகளை தான் நாம் குறைபாடுகளாக ஒத்துக் கொள்கிறோம். இதையும் தாண்டி ஒரு குறைபாடாக ஏற்றுக்கொள்ளப்படாத விஷயங்கள் நமது சமூகத்தில் அதிகம் உள்ளன. குறிப்பாக நமது நாட்டில் பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அதை அங்கீகரிக்க ஒருவிதமான தயக்கங்கள் இருக்கின்றன. இந்த தயக்கத்தினால் ஒரு குழந்தைக்கு அறிவு சார்ந்த குறைபாடுகள் இருப்பின் அவைகளை சரி செய்ய முயல்வதுகனுக்கான சிகிச்சைகள் அளிக்க முடியாமல் போகிறது. பொதுமக்களிடம் இது தொடர்பான மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.

 உடல் குறைபாடு மற்றும் அல்லாமல் அறிவு திறன் சார்ந்த குறைபாடுகளையும் அதை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். 2016 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு சில உரிமைகளை கொடுத்தது. ஆனால், அந்த சட்டம் குறித்து கூட முழுமையான விழிப்புணர்வு ஒரு சிலரிடம் இதுவரை இல்லை.

 மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த ஒரு பள்ளிகளிலும் அட்மிஷன் வழங்க வேண்டும். ஆனால், இது குறித்த முழுமையான விழிப்புணர்வு இல்லாமல் சில பள்ளிகளில் அவர்களுக்கு அட்மிஷன் மறுத்து வருகிறது. இதை உறுதி செய்யக்கூடிய சில அமைப்புகளும் இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது.

 ஊனம் என்பது என்பது ஒரு நிலை அது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். நாம் அனைவரும் தற்போது சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எந்த சூழலிலும் எதுவும் நடக்கலாம்.

 ஒருத்தருடைய தேவையை உணர்ந்து செயல்படுவது தான் ஒருவரை மனிதன் ஆக்குகிறது. அமர்சேவா சங்கம் தங்களது சேவை மூலம் தங்களது பெயரை நிலைக்க வைத்துள்ளது.என்றார்.

 

Tags :

Share via