தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்யும் திட்டம் இல்லை டாஸ்மாக் நிறுவனம்

by Editor / 11-08-2022 04:16:31pm
தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்யும் திட்டம் இல்லை டாஸ்மாக் நிறுவனம்

தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்யும் திட்டம் இல்லை என டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்து உள்ளதாக. பிரதாப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருந்தார் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் அது மனித உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்றும் இதுதொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் கூறியிருந்தார். இதற்கு டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தற்போது பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via