ஓணம் பண்டிகை படகுப்போட்டி அமித்ஷாபங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பு

by Editor / 27-08-2022 10:17:27am
ஓணம் பண்டிகை படகுப்போட்டி அமித்ஷாபங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன்  அழைப்பு

ஓணம் பண்டிகையையொட்டி நடைபெறவுள்ள நேரு கோப்பை படகுப் போட்டி கொண்டாட்டத்தில் பங்கேற்க, கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆலப்புழாவில் உள்ள புன்னமடை ஏரியில் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறும் நேரு கோப்பை படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வருமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைப்பு விடுத்துள்ளார்.

ஓணம் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மத்திய அமைச்சரு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 23ஆம் தேதி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

தென் மாநிலங்களின் தென் மண்டல கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 3 வரை கோவளத்தில் நடத்தப்படும், இதில் அமித் ஷாவும் பங்கேற்கிறார். கவுன்சில் கூட்டத்தை தொடர்ந்து ஓணம் பண்டிகைக்கு பிறகுதான் திரும்ப வேண்டும் என்று அமித்ஷாவிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இம்முறை முதலமைச்சர் கலந்துகொள்வதால் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை பலப்படுத்த படகுப் போட்டி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்க அமித் ஷா ஒப்புக்கொண்டால் மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இந்த ஆண்டு 22 'சுந்தன்' படகுகள் போட்டியில் பங்கேற்கின்றன.

கே.எஸ்.ஆர்.டி.சி.யின் பட்ஜெட் டூரிஸம் பிரிவு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் நேரு கோப்பை படகுப் போட்டிக்காக சிறப்பு பேருந்து சேவைகளை நடத்துகிறது. பஸ் டிக்கெட்டுகளுடன் போட்டிக்கான டிக்கெட்டுகளும் விற்கப்படும். டிக்கெட் முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ளவும்: 9846475874

 

Tags :

Share via