எம்.எல்.ஏ.- இந்தியாவின் இளம் வயது மேயர் திருமணம்.

by Editor / 04-09-2022 11:47:37pm
எம்.எல்.ஏ.- இந்தியாவின் இளம் வயது மேயர் திருமணம்.

பாலுசேரி தொகுதியின் இளம் எம்எல்ஏ சச்சின் தேவ். இவர், இந்திய மாணவர் கூட்டமைப்பின் மாநில செயலாளராகவும் இருந்து வருகிறார். இதேபோன்று, தனது 21-வது வயதில் திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பதவியேற்றவர் ஆர்யா ராஜேந்திரன். இதனால், இந்தியாவின் இளம் வயது மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் பாலசங்கோம் என்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் குழந்தைகளுக்கான அமைப்பிலும் ஒன்றாக பணியாற்றி வந்துள்ளனர்.

இருவருக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இன்று காலை எளிமையான முறையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வருகிறவர்கள் நன்கொடை கொடுக்க விரும்பினால், அவர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அல்லது கேரளாவின் சில அனாதை இல்லங்களுக்கு அவற்றை வழங்கும்படி கேட்டு கொண்டனர். இந்த திருமண விழாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்

 

Tags :

Share via