தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்.

by Editor / 21-09-2022 11:12:25am
தமிழகம் முழுவதும்  இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்.

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் இன்று நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் ஹெச்1 என்1 இன்புளூயன்சா காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை 1,166 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த காய்ச்சலுக்கு இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியாா் மருத்துவமனைகளில் 260 பேரும், வீடுகளில் 96 பேரும் சிகிச்சையில் உள்ளனா். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை வரும் வரையிலும், வந்த பின்னரும் காய்ச்சல் முகாம்களை நடத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக இன்று 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் 100 இடங்களில் முகாம் நடைபெறும். குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம். குழந்தைகளை கண்காணிக்கும்படி பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via