ஜனாதிபதி தேர்தல் திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல்.

by Editor / 18-07-2022 08:31:56am
ஜனாதிபதி தேர்தல்  திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தகவல்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம், ஆந்திரப் பிரதேசத்தில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு தெரிவித்தன. எனவே, திரெளபதி முர்முவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆனார் என்று பெருமையை திரெளபதி முர்மு பெறுவார். மேலும், பிரதீபா பாட்டீலுக்கு பிறகு இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் முர்மு பெறுவார்.

 

Tags : It is reported that Thirelapathi Murmu has a bright chance of winning the presidential election.

Share via