மணமகன் வீட்டு வாசலில் மணமகள் பெயரில் 10 கட்டளைகள் கட்டவுட்டால் பரப்பரப்பு.

by Editor / 02-06-2022 11:00:41pm
மணமகன் வீட்டு வாசலில் மணமகள் பெயரில்  10 கட்டளைகள் கட்டவுட்டால்  பரப்பரப்பு.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த மணமகன் பொன்ராஜ்கும், கரைசுத்து புதூரை சேர்ந்த மணமகள் சுவாதி அனுஷியாவுக்கும் 01.06.22 அன்று கரை சுத்து புதூரில் திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10 கட்டளைகள் எனும் தலைப்பில் கட் அவுட் வைத்திருந்தனர். மணமகள் மணமகனுக்கு கட்டளை இடுவதாக அவர்கள் அச்சடித்து வைத்த வசனங்கள் அனைவரையும் முதலில் அதிர்ச்சியடைய வைத்தும் பின்னர் சிரிப்பிலும்  ஆழ்த்தியது.

மணமகனின் நண்பர்கள் மணமகள் அனுசியாவின் பெயரில் தேர்வு செய்த போர்டு வைத்த 10 கட்டளைகள் விபரம் வருமாறு :

1. உன்னுடைய மனைவி நான் ஆகிறேன். மற்றொரு காதலி உனக்கு இருக்க கூடாது.
2. அடுத்தவரின் மனைவியை பார்த்து சிரிக்க கூடாது. அவளுடைய அழகை குறித்து வர்ணிக்க கூடாது.
3. இரவு 8:30 மணிக்கு கிச்சன் க்ளோஸ்.
4. இரவு 9:30 மணிக்கு பெட்ரூம் க்ளோஸ்.
5 தேங்காய் எண்ணெய், சோப்பு,ஷாம்பு, துண்டு சொந்தமாய் எடுத்துக்கொண்டு போய் குளிக்க வேண்டும், தொந்தரவு செய்யக்கூடாது.
6. ஹோட்டல் சாப்பாட்டை நிறுத்தி பழைய சாப்பாடு என்றாலும் வீட்டில் சாப்பிட வேண்டும்.
7. தண்ணி அடித்தால் வீட்டிற்கு வெளியே படுத்துக்கொள்ள வேண்டும்.
8. சாயங்காலம் 6:3௦ முதல் 9:3௦ மணி வரை சீரியல் டைம். அந்த நேரத்தில் கூப்பிட்டு தொந்தரவு செய்ய கூடாது,பச்சை தண்ணீர் கூட கிடையாது.
9. உறக்கத்தில் சத்தம் போடவோ, குறட்டை விடவோ கூடாது.
10. மாமியாரின் செயல்பாடுகளுக்கு எவ்வித தயவு தாட்சண்யம் பார்க்காமல் பதிலடி கொடுக்கப்படும்.

இவ்வாறாக, 10 கட்டளைகள் கொண்ட கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது. திருமண வரவேற்பு விழாவிற்கு மணமகள் பெயரில் மணமகனின் நண்பர்கள் வைத்த 10  கட்டளை கட்டவுட்டை படித்து, ரசித்து, சிரித்து  சென்றனர்.

 

Tags :

Share via