பி.எட் மாணவர் சேர்க்கை.. வழிகாட்டுதல்கள் வெளியீடு

by Staff / 22-09-2022 03:52:45pm
பி.எட் மாணவர் சேர்க்கை.. வழிகாட்டுதல்கள் வெளியீடு

B.Ed., மாணவர் சேர்க்கை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, "அனைத்து வகை கல்லூரிகளிலும் B.Ed., மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். அரசு கல்வியியல் கல்லூரிகள், உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் சேர tngasaedu.in இணையதளத்தை அணுகலாம். தனியார் கல்லூரிகளில் சேர அந்தந்த கல்லூரிகளின் இணையதளத்தை அணுக வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அசல் சான்றிதழ்களை வைத்திருத்தல் அவசியம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via