10-க்கு மோடி ஜி வாட்டர் பாட்டில்: அமோக விற்பனை

by Staff / 23-09-2022 02:11:32pm
 10-க்கு மோடி ஜி வாட்டர் பாட்டில்: அமோக விற்பனை

சேலத்தில் 10 ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை அறிமுகம் செய்து விற்பனையை மாவட்ட பாஜகவினர் தொடங்கி வைத்தனர்.பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக பிரசாரப் பிரிவு மற்றும் வெளியீட்டுப்பிரிவு மாவட்டச்செயலாளர் கோபால் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் குடிநீர் கிடைக்க வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நேற்று(செப். 22) 10 ரூபாய்க்கு 1 லிட்டர் மோடி ஜி குடிநீர் பாட்டில் விற்பனை இன்று கன்னங்குறிச்சி பகுதியில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டு விற்பனையைத் தொடக்கி வைத்தனர்.சேலம் மாநகரப்பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில், இந்த மலிவு விலை மோடி ஜி குடிநீர் பாட்டில் மக்களுக்குக்கிடைக்கும் என்று பாஜகவினர் தெரிவித்தனர்.

 

Tags :

Share via