வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

by Staff / 25-10-2022 10:34:54am
வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் தனது மனைவி ஜில் பைடனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், குத்து விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். துணை அதிபர் கமலா ஹாரிசும் இதில் கலந்து கொண்டார். அதிபர் பைடன் தெற்காசிய சமூகத்தினரிடையே பேசும்போது, தெற்காசிய மக்களை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசும்போது, உலகிற்கு, நாம் ஒவ்வொருவரும் ஒளியை கொண்டு வரக்கூடிய ஆற்றலை கொண்டிருக்கிறோம் என நினைவுப்படுத்துவது இந்த தீபாவளி. அமெரிக்கா முழுவதும் பரவியுள்ள தெற்காசிய சமூகத்தினருக்கு இந்த நாளில் நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தெற்காசிய அமெரிக்கர்கள் நம்முடன் ஒன்றிணைந்து, நாமெல்லாம் ஒரே தேசம் என்ற ஆன்மாவை பிரதிபலிக்கின்றனர் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via