இரு விரல் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

by Staff / 31-10-2022 01:57:35pm
 இரு விரல் சோதனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு நடத்தப்படும் இருவிரல் சோதனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவிரல் பரிசோதனை என்பது பெண்களின் பாலுறுப்புக்குள் இருவிரல்களை விட்டு கன்னித்திரை கிழியாமல் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்யப்படும் முறையாகும். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரு விரல் சோதனை முறை இன்றும் நடைமுறையில் இருப்பது ஆணாதிக்க மனோபாவம் கொண்டது. இதில் எந்த அறிவியல் தன்மையும் இல்லை. எனவே, இரு விரல் சோதனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இருந்து இருவிரல் பரிசோதனை தொடர்பான பாடங்களை நீக்க மத்திய மற்றும் மாநில சுகாதாரத்துறை செயலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

 

Tags :

Share via