சூப்பர்ஸ்டாரை போலவே இருக்கும் பாகிஸ்தான் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி

by Staff / 04-11-2022 11:43:12am
சூப்பர்ஸ்டாரை போலவே இருக்கும் பாகிஸ்தான்  ஓய்வு பெற்ற அரசு அதிகாரி

பாகிஸ்தானை சேர்ந்த 62 வயதான ரேஹ்மத் கஷ்கோரி ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவர். இவர் சாயலில் அச்சு அசலாக நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இருக்கிறார்.இவருடன் வேலைப்பார்த்த பலரும் இவருக்கு தலைவர் ரஜினிகாந்தின் சாயல் இருக்கிறது என கூறியப்போது இவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். வேலையிலிருந்து ஓய்வுப்பெற்ற பின் சமூக வலைதளங்களில் பலரும் இவரை ரஜினி காந்த என அழைக்க தொடங்கவே, உள்ளம் பூரிப்படைந்து, ‘ கடவுள் என்னை ஒரு சிறந்த நடிகரும் உயர்ந்த மனிதருமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல் படைத்ததற்காக பெருமகிழ்ச்சியடைகிறேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via