இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை – உதயநிதி

by Staff / 14-12-2022 12:23:18pm
இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை – உதயநிதி

தமிழ் நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ’இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை; மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ள மாமன்னன் படமே எனது கடைசி திரைப்படம்; கமலஹாசன் தயாரிப்பில் நடிக்கவிருந்த படத்திலிருந்து விலகுவதாகவும் கூறியுள்ளார்.மேலும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்; முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன்; வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.

 

Tags :

Share via