கயத்தாறு நடராஜர் சிலை பிரான்ஸில் ஏலத்துக்கு தயாரானபோது தடுத்து நிறுத்தம்: தமிழக போலீஸார் நடவடிக்கை.

by Editor / 18-12-2022 08:56:10am
கயத்தாறு நடராஜர் சிலை பிரான்ஸில் ஏலத்துக்கு தயாரானபோது தடுத்து நிறுத்தம்: தமிழக போலீஸார் நடவடிக்கை.

கயத்தாறில் திருடுபோன 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் சிலை, பிரான்ஸ் நாட்டில் ஏலமிடத் திட்டமிட்டிருந்தபோது, அதை கடத்தல் தடுப்புப் பிரிவினர் தடுத்து நிறுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம்,  கயத்தாறு கோதண்ட ராமேஸ்வரர் கோயிலில் கடந்த 1972-ஆம் ஆண்டில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடராஜர் உலோகச் சிலை திருடுபோனது. இதுதொடர்பாக கோவில்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் உள்ள ஒரு தனியார் ஏல மையத்தில் இந்த நடராஜர் சிலை வெள்ளிக்கிழமை (டிச.16) ஏலமிடத் திட்டமிட்டுள்ளதாகவும், ஆரம்பத் தொகையாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் யூரோ வரை நிர்ணயித்திருப்பதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு சில நாள்களுக்கு முன்பு தடுப்புப் பிரிவுக்கு சில நாள்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணையில், அங்கு ஏலமிட இருப்பது கயத்தாறு கோதண்ட ராமேஸ்வரர் கோயிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு உயரதிகாரிகள் இந்த ஏலத்தைத் தடுத்து நிறுத்த இந்திய தொல்லியல் துறை மூலமாகவும், மூலமாகவும் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து சிலை ஏலமிடப்படுவது தடுக்கப்பட்டது. மேலும், அந்த ஏல மையத்தில் இருக்கும் நடராஜர் சிலையை தூதரகம் மூலம் மீண்டும் தமிழகத்துக்கு கொண்டுவரும் நடவடிக்கை விரைந்து எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.ஏல மையத்தில் இருக்கும் நடராஜர் சிலை
தூதரகம் மூலம் மீண்டும் தமிழகத்துக்கு 3 மாதங்களுக்குள் கொண்டு வரப்படும் என தெரிகிறது.

 

Tags :

Share via