தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 18,925 தற்கொலை.

by Editor / 19-12-2022 03:08:33pm
தமிழகத்தில்  கடந்த 2021-ம் ஆண்டில் 18,925 தற்கொலை.

 மத்திய குற்ற ஆவண காப்பகம் அளித்துள்ள தகவலின் படி நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1,64,033 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரும் வேலையின்மை மற்றும் பணியிலிருந்து நீக்கப்பட்டதன் மனச்சுமை காரணமாக உயிரிழக்கவில்லை என்றும் தற்கொலை செய்து கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த 2021-ம் ஆண்டில் 18,925 தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது

 

Tags :

Share via