பொங்கல் பரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..?

by Editor / 20-12-2022 08:46:51am
பொங்கல் பரிசு முதல்வர்  மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு..?

சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, கூட்டுறவு – உணவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பொங்கல் சிறப்புத் தொகுப்பாக இந்த (2022)ஆண்டு அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், வரும் 2023ஆம் ஆண்டு பொங்கல் பரிசாக என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ரொக்கப்பணமாக ரூ 1,000 வழங்குவதா.. அல்லது பரிசுத் தொகுப்பில் கூடுதலாக பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து வழங்குவதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இதையடுத்து, பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கலாம் என அதிகாரிகள் முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர்  விரைவில் வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

 

Tags :

Share via