இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும்,நாளையும் விடுமுறை..

by Editor / 04-01-2023 07:09:11am
இரண்டு மாவட்டங்களுக்கு இன்றும்,நாளையும் விடுமுறை..

இன்று நீலகிரி மாவட்டத்திற்கும், நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இன்று 4 ஆம் தேதி ஸ்ரீ ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலும், நாளை 5 ஆம் தேதி சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்திலும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via