கேரளாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.வாகன ஓட்டிகள் வேதனை.

by Editor / 02-04-2023 10:12:37am
கேரளாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு.வாகன ஓட்டிகள் வேதனை.

 

கேரளாவில் அடுத்தடுத்து இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலையை கேரளா அரசு உயர்த்தி உள்ளது. இது எங்களைப் போன்ற ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கார், லாரி ஓட்டுனர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலை உயரும் போது வாடகை கார் மற்றும் ஆட்டோ கட்டணங்களும் உயர்த்த வேண்டியுள்ளதாகவும்,இதனால் சின்ன, சின்ன சவாரிக்கு மக்கள் வருவதில்லைஎன்றும், அரசு பஸ்சுக்கு காத்து நின்று ஏறி செல்வதாகவும்,இது ஆட்டோ,வாடகைக்கார் ஓட்டுனர்களுக்கு  மன வருத்தத்தை ஏற்படுத்துவதோடு, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது என்றும் .இதனால் எல்லைப்புற மாவட்டங்களான தென்காசி,குமரி ஆகிய மாவட்டத்தில் வந்து பெட்ரோல் நிரப்பினால் லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 3. 50 லாபம் கிடைக்கிறது இவ்வாறு கேரளா வாகன ஓட்டிகள் வேதனைத்தெரிவிக்கின்றனர்.கேரளா அரசு வாகன ஓட்டியின் துயரங்களைகருத்தில் கொண்டு விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழக கேரளா எல்லைகளிலுள்ள தமிழக பெட்ரோல் நிலையங்களில் கேரளா வாகன ஓட்டிகள் வ்ருகை அதிகரித்துள்ளது.

Date    Price    Change
Apr 02, 2023    107.86 ₹/L    0.72
Apr 01, 2023    108.58 ₹/L    2.11
Mar 31, 2023    106.47 ₹/L    0.02
Mar 30, 2023    106.45 ₹/L    0.47

 

Tags :

Share via