நடிகர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கிய கமல்

by Staff / 09-03-2024 05:15:15pm
நடிகர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கிய கமல்

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக அந்த சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. அதனைத்தொடர்ந்து அதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், கடந்த மாதம் ரூபாய் ஒரு கோடி வழங்கினார். தற்போது அவரைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனும் நிதியுதவி வழங்கியுள்ளார்.

 

Tags :

Share via