முன்னாள் பேரூராட்சி தலைவி  23 நாட்களுக்குப் பிறகு கைது.

by Editor / 10-04-2023 10:37:34pm
முன்னாள் பேரூராட்சி தலைவி  23 நாட்களுக்குப் பிறகு கைது.

திருச்செந்தூர் அருகே உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளர் தற்கொலைக்கி காரணமான  முன்னாள் பேரூராட்சி தலைவர் ஆயிஷா கல்லாசியை  23 நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர்  கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவரை பேரூராட்சித் தலைவரின் மாமியாரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ஆயிஷா கல்லாசி
பணிமூப்பு ஆணை வழங்காமல் திட்டியதால் மனமுடைந்து தூய்மைப் பணியாளர் சுடலைமாடன் கடந்த மாதம் 17ஆம் தேதி டிசம்பரில் தற்கொலை செய்து கொண்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆயிஷா கல்லாசி , செயல் அலுவலர் பாபு இருவர் மீதும் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் குலசேகரன்பட்டின காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் இருவரும் தலை மறைவான நிலையில் காவல்துறையினர் இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில்   கிடைத்த ரகசிய தகவலின் பெயரில்   அடைக்கலாபுரம் அருகே வாகன சோதனையின் போது காரில் தப்பிச் சென்ற ஆயிஷா கல்லாசியை திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையிலான    காவல்துறையினர் கைது செய்து அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது ஆதரவாளர்களும் கட்சியினரும் காவல் நிலையத்தை சூழ்ந்து கொண்டனர். தொடர்ந்து ஆயிஷா கல்லாசியை நீதிமன்றம் அழைத்துச்செல்வதற்காக  காவல்துறையினர் வாகனத்தில்  ஏற்றும்போது ஆயிஷா கல்லாசியை   பத்திரிகையாளர்கள் படம் எடுக்காதவாறு தடுத்து நின்றனர். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via