கர்நாடக பாஜகவை கலைக்க வாய்ப்பு

by Staff / 16-05-2023 12:02:02pm
கர்நாடக பாஜகவை கலைக்க வாய்ப்பு

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவு எதிரொலியால் பாஜக தலைமை கலைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைந்த நிலையில், மாநில தலைவர் நளின் குமார் கட்டில் பொறுப்பேற்று பதவி விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் ராஜினாமா செய்தால் மத்திய அமைச்சர் சோபா கரந்தல்ஜெ தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தற்போது உள்ள தொகுதிகளை மீண்டும் வெல்ல முக்கிய பலம்வாய்ந்த தலைவர்களை உயர் பதவிக்கு கொண்டு வர வேண்டும் என கர்நாடக பாஜகவில் கோரிக்கை எழுந்துள்ளது.

 

 

Tags :

Share via