. டிராக்டர், வேன் மோதிய விபத்தில் 26 பேர் உடல் கருகி பலி

by Staff / 16-05-2023 05:00:57pm
. டிராக்டர், வேன் மோதிய விபத்தில் 26 பேர் உடல் கருகி பலி

டிராக்டர், வேன் மோதிய விபத்தில் 26 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மெக்சிகோ மாநிலமான தமவுலிபாசில் நேற்று டிராக்டர்-டிரெய்லர் மற்றும் வேன் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 26 பேர் உடல் கருகி பலியானதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இது குறித்து நடத்திய விசாரணையில், “இறந்த அனைவரின் அடையாளங்களையும் அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை எனவே டிரக்கின் ஓட்டுநரும் விபத்தில் உயிரிழந்தாரா அல்லது அவர் தப்பியோடினாரா என்பது தெளிவாக தெரியவில்லை” எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via