மும்பையில் விநாயகர் சிலைக்கு ரூ.264.25 கோடிக்கு காப்பீடு

by Editor / 01-09-2019 10:24:59am
மும்பையில் விநாயகர் சிலைக்கு ரூ.264.25 கோடிக்கு காப்பீடு

   மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை ஒன்று,  266.65 கோடி ரூபாய்க்கு  ( ஒரு நாளைக்கு 55.33 கோடி ரூபாய்) காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் மும்பையில் Goud Saraswat Brahmin Seva Mandal என்னும் குழு, அதிக ரூபாய் செலவில் விநாயகர் சிலையை தயாரித்து அதற்காக காப்பீடும் செய்துள்ளது. அந்த காப்பீடானது, விநாயகர் சிலை, விநாயகர் சிலையை பார்க்க வருபர்கள், பூசாரிகள் உள்ளிட்ட அனைவருக்குமானது. காட்சிக்கு வைக்கப்பட்டது முதல், விநாயகர் சிலை கரைக்கப்படும் வரை இந்த காப்பீடு செல்லும் என அக்குழு தகவல் தெரிவித்துள்ளது. விழாவிற்காக வைக்கப்படுள்ள விநாயகர் சிலைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ள தொகை குறித்து அறிந்த பொதுமக்கள், ஆச்சரியமடைந்தது மட்டுமல்லாமல் அச்சிலையை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். Goud Saraswat Brahmin Seva Mandal, கடந்த வருடம் வைத்த விநாயகர் சிலையை ரூ.264.25 கோடிக்கு காப்பீடு செய்தது குறிப்பிடத்தக்கது. 

Share via