தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

by Editor / 04-08-2023 11:14:29pm
தமிழ்நாட்டில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.

தமிழ்நாட்டில் 27 IPS அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு IG ஆசியம்மாள், சென்னை காவல்துறை தலைமையக IGயாகவும். தென்மண்டல IG அஸ்ரா கார்க், சென்னை மாநகரவடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராகவும். திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா பொருளாதார குற்றப்பிரிவு IGயாகவும். மதுரை காவல் ஆணையர் நாகேந்திரன் நாயர், தென் மண்டல IGயாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்:

பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் சென்னை காவல்துறை தலைமையக ஐ.ஜி.யாக நியமனம்.

மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தென்மண்டல ஐ.ஜி.யாக நியமனம்.

தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக நியமனம்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக மாற்றம்.

சென்னை தலைமையிட கூடுதல் ஆணையர் லோகநாதன் மதுரை காவல் ஆணையராக நியமனம்

கோவை ஐஜி சுதாகர் சென்னை போக்குவரத்து காவல் ஆணையராக மாற்றம்.

சிவில் சப்ளை சிஐடி பிரிவு டிஜிபி ஆக வன்னிய பெருமாள் நியமனம்.

சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி டிஜிபி ஆக ராஜீவ் குமார் நியமனம்.

பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஆக பாலநாகதேவி நியமனம்.

காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி. சந்தோஷ் குமார், லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மற்றும் இணை இயக்குநராக நியமனம்.

டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி.யாக பிரஜ் கிஷார் ரவி நியமனம்.

திருச்சி மாநகர காவல் ஆணையராக காமினி ஐபிஎஸ் நியமனம்.

மதுரை மாநகர காவல் ஆணையராக லோகநாதன் ஐபிஎஸ் நியமனம்.

மேற்கு மண்டல ஐஜியாக பவானிஸ்வரி ஐபிஎஸ் நியமனம்.

 

Tags :

Share via