தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த்

by Staff / 25-08-2023 01:36:22pm
தொண்டர்களை பார்த்து கையசைத்த விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜயகாந்தின் பிறந்தநாளை தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுகின்றனர். இதனிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்தார். அங்கு திரண்டிருந்த தொண்டர்களை பார்த்து அவர் கையசைத்தார். கூடியிருந்த தொண்டர்களும் ஆரவாரத்துடன் கேப்டன், கேப்டன் என முழக்கமிட்டனர். இந்த நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் நலமாக இருக்கிறார் என தெரிவித்தார்.

 

Tags :

Share via