கார் மீது லாரி மோதிய விபத்தில் பலியான மாணவர்களுக்கு உதவும் வகையில் ரூ.30 லட்சம் நிதி

by Editor / 03-12-2019 11:13:11pm
  கார் மீது லாரி மோதிய விபத்தில் பலியான  மாணவர்களுக்கு உதவும் வகையில் ரூ.30 லட்சம் நிதி

  கார் மீது லாரி மோதிய விபத்தில் பலியான  மாணவர்களுக்கு உதவும் வகையில் ரூ.30 லட்சம் நிதி

வாஷிங்டன்:

   இந்தியாவை சேர்ந்த மாணவர் வைபவ் கோபி செட்டி (26), மாணவி ஜுடி ஸ்டேன்லி (23). இவர்கள் 2 நபர்களும் அமெரிக்காவில் உள்ள டென்னிசே பல்கலைக்கழகத்தில் விவசாய கல்லூரியில் படித்து வந்தனர். உணவு  அறிவியல் சம்பந்தமான பாடத்தில் பட்ட மேற்படிப்பு பயின்று வந்தனர். 

அமெரிக்காவில் அனைத்து வருடமும் நவம்பர்              28-ந்தேதி நன்றி தெரிவிக்கும் விழா சிறப்பாகவும் கோலாகலமாக நடைபெறும். சம்பவத்தன்று இரவு சவுத் நாஷ்வில்லே என்ற இடத்தில் நடந்த விழாவில் இவர்கள் இருவரும் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் இவர்கள் இருவரும் விடுதிக்கு ஒரு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர் அப்போது.நோலென்ஸ் வில்லே என்ற இடத்தில் இவர்கள் வந்த கார் மீது அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு லாரி பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதனால் நிலை தடுமாறிய கார் தாறுமாறாக ஓடி ரோட்டில் உள்ள தடுப்பு சுவரில் இடித்து மரத்தில் மோதியது. அதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது அதன் இடிபாட்டில் சிக்கி வைபவ் கோபி செட்டி, ஜூடிஸ் டேன்லி ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கிடையே இவர்களது கார் மீது மோதிய லாரியின் உரிமையாளர் டேவிட் டோரெஸ் (26) போலீசில் சரண் அடைந்தார். 

விபத்தில் பலியான 2 நபர்களும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே, அவர்களின் உடல்களை இந்தியா அனுப்பவும், இறுதி சடங்கு நடத்த உதவும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் 

(ஆன்லைன்’ மூலம் சுமார் ரூ.30 லட்சம் (42 ஆயிரம்டாலர்) நிதி திரட்டி உள்ளனர்.