"காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டி பூசல் புதிதல்ல" கே.எஸ். அழகிரி

by Staff / 15-10-2023 01:26:51pm

திமுக மகளிர் உரிமை மாநாடு இந்தியா கூட்டணி மாநாடு போல் சிறப்பாக நடைபெற்றது என்று காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சிக்கு கோஷ்டி பூசல் புதிதல்ல; இன்று ஒன்றை பேசுவார்கள், நாளை ஒன்றை பேசுவார்கள்; தமிழகத்தில் பாஜக வளர்வதாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியது விசித்திரமானது. சென்னையில் இந்தியா கூட்டணி ஆலோசனை விரைவில் நடைபெறும்; தேர்தல் மற்றும் கட்சிப்பணிகளுக்காக பிரியங்கா காந்தி அடிக்கடி தமிழ்நாடு வருவார் என்றார்.

 

Tags :

Share via