பச்சை பாலுக்கான தேவை இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

by Staff / 22-11-2023 01:10:57pm
பச்சை பாலுக்கான தேவை இல்லை - அமைச்சர் மனோ தங்கராஜ்

பச்சை பாலுக்கான தேவை இல்லை என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஆவினின் டிலைட் பாலுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பாலும் ஆவினில் விற்பனை செய்யப்படுகிறது. 3.5% கொழுப்பு உள்ள பாலே போதும் என்பது மருத்துவர்களின் கருத்து, அதனால் பச்சை பாலுக்காகான தேவை இல்லை. தனியார் பாலை விட ஆவின் பால் குறைந்த விலைக்கு விற்பனையாகிறது. தற்கால சூழலுக்கு ஏற்ப ஆவின் டிலைட் பாலுக்கு சரியான விலையே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆவின் டிலைட் பாலில் இருந்து கொழுப்பு சத்து குறைக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

 

Tags :

Share via