தெலங்கானாவில் 11 மணி வரை 20.64% வாக்குப்பதிவு

by Staff / 30-11-2023 12:49:25pm
தெலங்கானாவில் 11 மணி வரை 20.64% வாக்குப்பதிவு

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு, இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி, 20.64 % வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் தெலங்கானாவில் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3ஆம் தேதி நடக்கிறது.

 

Tags :

Share via